மலேசியாவில் ‘ரொபோட்டிக்’ தொழில்நுட்ப சிறப்பு மையம்! உடன்பாடு கையெழுத்து! – VANAKAM MALAYSIA

மலேசியாவில் ‘ரொபோட்டிக்’ தொழில்நுட்ப சிறப்பு மையம்!  உடன்பாடு கையெழுத்து! -(Video)
சைபர் ஜெயா, டிசம்.06- மலேசியாவில் ரொபோட்டிக் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்பு மையம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக அட்வான்ஸ் டெக்னொலோஜிஸ் இன்னோவேட்டிவ் எலைன்ஸ் (ATIA) நிறுவனம், இதர மூன்று உள்நாட்டு ரொபோட்டிக் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுடன் இன்று புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திட்டது.
இந்தப் புரிந்து உடன்பாடு கையெழுத்திடப்படும் வைபவம், சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் பின் ஷாரி முன்னிலையில் நடந்தது. தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் ரொபோட்டிக் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புக்களுக்கு இடையே தொடர்பையும் ஒத்துழைப்பையும் வளர்க்க,இந்த புரிந்துணர்வு உடன்பாடுகள் அடிப்படையாக விளங்கும்.
உள்ளூரை சேர்ந்த தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க நிறுவனங்களுக்கும் கொரியாவைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் இடையே உறவுகள் வலுப்பட ATIA நிறுவனம் உதவிகரமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மலேசியாவின் ரொபோட்டிக் தொழில்நுட்ப நிறுவனங்களான MTDC, MyRAS, MARii மற்றும் ATIA ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான இந்த உடன்பாடுகள் சைபர் ஜெயாவில் ரொபோட்டிக் தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையம் ஒன்றை உருவாக்கும் முயற்சிக்கான தொடக்கமாக அமையும் என்று கூறப்பட்டது.

இந்த முயற்சிகள் 4.0 தொழில் புரட்சிக்கு வித்திடும். அதிநுட்ப தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பூங்காக்கள் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேலோங்கச் செய்யும் சிலாங்கூரின் முயற்சிக்கு ஏற்ப இது அமைந்திருக்கிறது மந்திரி புசார் அமிருடின் சொன்னார்.

கொரியாவின் பூசென் தொழில் மேம்பாட்டு அறவாரியம், இந்த ரொபோட்டிக் த்ழில்நுட்ப சுறப்பு மையம் அமைவதற்கு முக்கிய பங்காற்ற முன் வந்திருக்கிறது. அந்தவகையில் தற்போது புரிந்துண்ர்வு உடன்பாட்டு நிகழ்வை முன்னிட்டு இங்கு வந்திருக்கும் பூசெனில் இருந்து வந்திருக்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரொபோட்டிக் தொழில்நுட்பத்தில் சிறந்த நிபுணர்களளை தாம் பெரிதும் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

அந்த நிபுணர்களின் வருகையைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையிலான வியூக ஒத்துழைப்புக்கான சாத்தியக் கூறுகளைக் கண்டறியும் வகையிலான கலந்துரையாடல்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் கேட்டுக் கொண்டார்.